உங்களுடைய தீர்வு?

நம் வைஸ்ய குலத்திற்கான இன்றைய பெரும் சவால் வைஸ்ய திருமணங்கள் ! தடைப்படும் திருமணங்கள்! தவிப்பில் வைஸ்ய பெற்றோர்கள், மணமகன்கள், மணமகள்கள்.

என்ன காரணம்? என்ன சவால்கள்? என்ன தீர்வுகள்?

அதற்கான தீர்வுகளை நம் வைஸ்ய மக்களே தரவேண்டும் என்ற ஜனநாயக மாண்பில் திரு. M. கண்ணன் , Founder - World Arya Vysya Glitters Record Book & World Arya Vysya Achievers Award அவர்களின பெரு முயற்சியுடன் கன்னிகாதானம்.காம் ஒன்று சேர்வதில் பெருமை கொள்கிறது.

சிறந்த தீர்வை கூறும் நபர் அல்லது அமைப்பிற்கு 2018 -19 ஆம் ஆண்டின் World Arya Vysya Glitters Record Book இல் இடம் பெற செய்து வைஸ்ய சமூக சாதனையாளர் விருது வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்


பெயர் / குழுவின் பெயர்:
தொலைபேசி எண்:
கோத்திரம் மற்றும் முகவரி:

நம்முடைய வைஸ்ய குலத்தில் ஆண் மற்றும் பெண் ஜாதகர்களுக்கு திருமணம் தாமதப்படுகின்றது. அது ஏன்? காரணம் என்ன? மணமகனின் எதிர்பார்ப்புகள் என்ன? மணமகளின் எதிர்பார்ப்புகள் என்ன? மணமகனின் பெற்றோர் எதிர்பார்ப்பது என்ன? மணமகளின் பெற்றோர் எதிர்பார்ப்பது என்ன? திருமணத் தடைகளுக்கான காரணம் என்ன? மணமகனின் / மணமகளின் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகளில் எது எது சரி? எது எது எதிர்பார்கக்கூடாது? சுயத்தொழில் செய்தால் திருமணம் தாமதமாகுமா? வேலையில் இல்லாத மணமகளுக்கு திருமணம் தாமதமாகுமா? திருமணத்திற்கு தயாராக உள்ள மணமகனின் வசதிகள், வாழ்க்கை, வெளிதோற்றம் பார்ப்பது சரியா? அல்லது மணமகனின் சுய ஒழுக்கம்/பண்புகள் பார்ப்பது சரியா? மணமகளின் வேலை, சம்பளம், அழகு, நகைகள், சீர் வரிசை பார்ப்பது சரியா? அல்லது குணநலன்களை, குடும்பப்பின்னணியை பார்ப்பது சரியா? திருமண விஷயஙஂகளை சம்பந்திகள் ஆகப்போகின்றவர்கள் நேரடியாக பேசுவது சரியா? இடையில் யாரையாவது வைத்து பேசுவது சரியா? திருமண சம்பந்தப்பட்ட அறிமுக விஷயங்களில், உள்ளதை உள்ளபடி நாம் உண்மையாக பேசுவது சரியா? அல்லது மொட்டை பெருமைக்காக இல்லாததை இருப்பது போல் பேசுவது சரியா? பெட்டிக்கடை வைத்திருப்பதும், சுயத் தொழில் செய்வதும் தற்போது உள்ள பெண் வீட்டாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? இல்லையா? திருமணமானவுடன் மணமகனை பெற்றோர் சார்ந்திருப்பது ( பொருளாதரீதியாக / மனரீதியாக) மணமகள் வீட்டார் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா? (ஒரே ஒரு மகன் எனில் அவர் பெற்றோர் எங்கு செல்வார்கள்?) அதே போல் ஒரே ஒரு மகள் உள்ளவர்கள், திருமணத்திற்கு பின்னர் அவர்களின் எதிர்கால நிலைக்கு என்ன வழி? அசைவம்: மொத்தத்தில் நம் வைஸ்ய குலம் இதை ஏற்கின்றதா? நம் வைஸ்ய கலாச்சாரம் மற்றும் பண்பாடு, நம் பிள்ளைகளுக்கு நம்மால் வாழ்ந்து காட்டப்படுகின்றதா? இல்லையா? இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? கூட்டுக்குடும்பம் வாழ்க்கை நம் மகள் வாழப்போகும் இல்லத்தில் இருந்தால் சரியா? இல்லை வேண்டாமா? நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தியாக கதை நம் வீட்டு ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்கும், தெரியுமா? தெரியாதா? தெரியாது எனில் எப்படி தெரியவைக்க வேண்டும்? மணப்பெண்கள் முக்கிய நகரங்களில் உள்ள மணமகன் வரன்களை பாரக்கின்றார்கள். கிராமப்புரத்தில் இருக்கும் மணமகன்களை தவிர்க்கிறார்களே இது சரியா? தற்போது மணமகனுக்கும் மணமகளுக்கும் உள்ள வயது வித்தியாசம் ஒரு வருட வித்தியாசத்தில் அல்லது அதற்கும் குறைவாக வரன் தேடுகிறார்கள். இது சரியா?

SIGN INTO YOUR ACCOUNT CREATE NEW ACCOUNT

 
×
CREATE ACCOUNT ALREADY HAVE AN ACCOUNT?
 
×
FORGOT YOUR DETAILS?
×


  • share us


    About Us
    Contact-Us
    User-Guide
    Terms
    Privacy-Policy and Security
    Disclaimer

    Grievance


    Copyright © 2024 Kannikadhanam Aryavysya Matrimony made with